ஓமானில் இலங்கைப் பெண்கள் விற்பனை விவகாரம்: ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் கைது.

172

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது அதிகாரியாக பணியாற்றிய ஈ.குஷான் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓமானில் இலங்கை பெண்களை விற்பனை செய்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், அவரை விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கைப் பெண்களை ஓமானில் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஈ.குஷானின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.