பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு.

பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர்கள் தொடர்புகொள்ளும் நபர்கள், செல்லும் இடங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் சபை தெரிவித்துள்ளது.