நாளை மாலை 6.05 மணிக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவு நிகழ்வு இடம்பெறும்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

மாவீரர் நாள் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஈழத்தமிழர்களின் வாழ்விற்காகவும் உரிமைக்காகவும் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய எம் மண்ணின்  மாவீர்களினை நினைவுகூறும் முகமாக நாளை மாலை 6.05 மணிக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவு தூபியில் நினைவேந்தல் நிகழ்வானது நடைபெறவுள்ளது.

உறவுகள் அனைவரையும் கலந்து கொள்ள அழைத்து நிற்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.