இரத்தினக்கல் மோசடி குற்றச்சாட்டில் போலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது

133

வவுனியா மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என தன்னை போலியாக  இனங்காட்டி  நீல இரத்தினக்கல் ஒன்றை  மோசடி செய்த குற்றச்சாட்டில்  ஒருவரை லக்கல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் வாரியபொல, மினுவாங்கெட்ட  பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் பல தொலைக்காட்சி நாடகங்களில் பொலிஸ் வேடங்களில் நடித்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்த நீல இரத்தினக் கல் மற்றும் சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.