சுதந்திரக்கட்சியில் இருந்து விரட்டப்படவேண்டியது யார்?

ஆர்.சனத்

ஐக்கிய தேசியக் கட்சியின் 17 ஆண்டுகால ( 1977 – 1994) தொடர் ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைத்து, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெற்றிநடை போட வைத்தவர் சந்திரிக்கா அம்மையார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு முதன்முதலில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை பெற்றுக்கொடுத்தவர். (1994)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை (வெற்றிலை சின்னம்) உருவாக்குவதற்கு பிள்ளையார்சுழி போட்டவர்.n2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக களமிறக்கி, அவரை வெற்றிபெற வைப்பதற்கான வியூகங்களை வகுத்தவர் சந்திரிக்கா.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவின் மகள்.ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அரியணையேற்றுவதற்காக அயராது உழைத்த சந்திரிக்காவை, கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தியுள்ளார் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேன.
மைத்திரியின் தலைமைத்துவம்தான் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பெரும் சாபக்கேடாக அமைந்தது.வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமல் 2019 இல் பின்வாங்கியது சுதந்திரக்கட்சி. கோட்டாவுக்கு நேசக்கரம் நீட்டினார் மைத்திரி. அதுமட்டுமல்ல தலைமைக்கட்சி சென்ற அந்தஸ்த்தை இழந்து மொட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து 2020 பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை சுதந்திரக்கட்சிக்கு ஏற்பட்டது.
இப்படி பல சரிவுகளை, வீழ்ச்சிகளை பட்டியலிடலாம்.
மைத்திரியை ஜனாதிபதியாக்கியது தனது அரசியல் வாழ்வில் எடுத்த தவறான முடிவு என்பதை சந்திரிக்கா அம்மையார் ஒப்புக்கொண்டுள்ளார்.மைத்திரியும் தன்னால் முடியாது என்பதை அவ்வப்போது நிரூபித்துவருகின்றார். எனவே, கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டியது – இடைநிறுத்தப்பட வேண்டியது யார்?
படத்தில் – உலகின் முதல் பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க.
இலங்கையின் முதலாவது பெண் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி. சந்திரிக்கா