இங்கிலாந்தில் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் போன்றவற்றை கட்டும் தமிழர்களுக்கு பொலிசாரின் எச்சரிக்கை.

தற்பொழுது இங்கிலாந்தில் குளிர்காலம் ஆரம்பித்துள்ள வேளையில் இந்தியா இலங்கை போன்ற இடங்களை பூர்விகமாக கொண்டவர்களின் வீடுகளில் கொள்ளை அடிக்கும் நிகழ்வுகள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியா இலங்கை போன்ற நாடுகளை சார்ந்தவர்களே பெரும்பாலும் தங்க நகைகளை வீடுகளில் வைத்துள்ளார்.

இதன் காரணமாக கொள்ளைகாரர்கள் அவர்கள் வாழும் வீடுகளை அடையாளம் காண வீட்டு வாசலில் உள்ள கலாச்சார ரீதியான  அடையாளங்களை வைத்தே அவர்களின் வீடுகளை அடையாளம் காண்கிறார்கள் இதன் காரணமாக மாவிலை, தோரணம், திஸ்டி பூசணிக்காய் போன்றவற்றை வாசலில் வைக்கவேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார்கள்.