”கலகத்தலைவன்” படத்தின் முதல் நாள் வசூல்.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “கலகத்தலைவன்”. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஸ்ரீ காந்த தேவா இசையமைக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார்.
அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனவே படத்திற்கு முதல் நாளில் வசூலில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.
இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 3 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் இன்னும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.