இன்ஸ்டாகிராமில் உலகில் அதிக பின்தொடருபவர்களை கொண்ட நபராக கிறிஸ்டியானோ ரொனால்டோ.

உலகிலேயே 50 கோடி பின்தொடர்பவர்களை கொண்ட முதல் விளையாட்டு வீரர் எனும் பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றார். உலக மக்கள்தொகையில் 10 சதவீதத்திற்க்கும் அதிகமானோர் இப்போது போர்ச்சுகீசிய கால்பந்து சூப்பர்ஸ்டாரைப் பின்தொடர்கின்றனர்.

பேஸ்புக்,(15.4 கோடி) டுவிட்டர் (10.5 கோடி) மற்றும் இன்ஸ்டாகிராமில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை பின்தொடர்பவர்களை எட்டிய முதல் பிரபலமான நபர் ரொனால்டோ ஆவார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் விட இது இரண்டு மடங்கு அதிகம் ஆகும் இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ வெளியிடும் ஒவ்வொரு பதிவிற்கும் 2.3 மில்லியன் டாலர் பெறுகிறார். விளையாட்டு பிரபலங்களில் 3வது இடத்தில் இருக்கும் விராட் கோலி, ஒரு பதிவிற்க்கு 1.7 மில்லியன் டாலர் வசூலிக்கிறார். லியோனல் மெஸ்சி 37.6 கோடி பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக, செலினா கோம்ஸ் மற்றும் டுவைன் தி ராக் ஜான்சன் ஆகியோருடன் முதல் 5 இடங்களில் இருந்த கெய்லி ஜென்னர் உள்ளார்.

முதல் 25 இடங்களில் இருக்கும் மற்றொரு கால்பந்து வீரர் பிரேசிலின் சூப்பர் ஸ்டார் நெய்மர் ஜூனியர் ஆவார்.அவருக்கு 18.2 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர். ரொனால்டோ போர்ப்ஸ் பட்டியலில் இரண்டு முறை உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரராக இடம் பெற்று உள்ளார்.- முதலில் 2016 இல் மற்றும் பின்னர் 2017 ஆம் ஆண்டு .