ஜனாதிபதியின் வேலை திட்டத்துக்கு ஆதரவை வழங்குவோம்-பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

வடமாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலகம் நேற்று சனிக்கிழமை (19) வவுனியாவில் ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

ஜனாதிபதி, பிரதமராக இருந்த போது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக செயற்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு நீங்கள் பிரதமராக இருந்தபோது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக செயற்பட்டீர்கள்.

எனினும் அப்போது இடம்பெற்ற ஒரு சில குறைபாடுகள் காரணமாக எங்களால் அதனைப் பெற முடியவில்லை. இன்று நீங்கள் ஜனாதிபதியாகிவிட்டீர்கள். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. உங்களது வேலைத்திட்டங்களுக்கு எமது ஆதரவை வழங்கும் அதேநேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.