மோட்டார் பந்தயம்-18 வயதுடைய இரு இளைஞர்கள் பலி

பண்டாரகம – களுத்துறை பிரதான வீதியின் மொரோந்துடுவ பிரதேசத்தில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 18 வயதுடைய வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் வேறு சில இளைஞர்கள் குழுவுடன் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த போது, ​​இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் மொரோந்துடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.