பாதாள உலகக் குழு உறுப்பினர்கள்  இருவர் துப்பாக்கிச்சூட்டில் பலி.

மினுவாங்கொடை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலகக் குழு உறுப்பினர்கள்   இருவர் உயிரிழந்துள்ளனர்.

மினுவாங்கொடை, பொல்வத்த பிரதேசத்தில் இன்று (18) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் சிகிச்சைக்காக மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொத்தல பிரதேசத்தை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.