கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் பலி

கல்கமுவ – பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் கல்கமுவ மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.