வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் உரையாற்ற வேண்டும் :தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவுரை.

தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக்கூடாது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதோடு, வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் உரையாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அன்றும் சரி, இன்றும் சரி தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தாம் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.