தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்: திமுக குடியரசு தலைவருக்கு மனு.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி திமுக சார்பில் குடியரசு தலைவருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் அடிக்கடி கருத்து பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில், ஆளுநரை திரும்ப பெற கோரி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட மனு இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.அரசியலமைப்பு மீறி ஆளுநர் செயல்படுவதாக ஏற்கனவே திமுகவினர் குற்றச்சாட்டியிருந்த நிலையில், தற்போது மனு அளிக்கப்பட்டுள்ளது.