எதிர்ப்புகளுக்கு தூபமிடாது ஒத்துழையுங்கள் – தமிழ் அரசியில் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் வேண்டுகோள்

அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல தசாப்தங்களாக அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் தொடர்ந்து சிறைச்சாலைகளில் சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை, பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய சாதி மத அரசியில் பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று தமிழ் அரசியில் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்,

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய, தற்போதைய ஜனாதிபதி ரணில் அவர்களினால் பொது மன்னிப்பின் கீழ் சில அரசியில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்னர் , அதே போல் ஏனைய தமிழ் அரசியில் கைதிகளின் விடுதலைக்கும் அனைத்து தரப்பினரும்  எதிப்புகளுக்கு தூபமிடாது ஒத்துழைப்பு வழங்கும் படி உறவினர்கள் கேட்டுகொண்டுள்னர்.

style="display:block" data-ad-format="autorelaxed" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="9087878063">