தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த பிரசாரத்தை தவிர்க்குமாறு மாவீரர்தின ஏற்பாட்டாளர்களுக்கு அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது அதன் உறுப்பினர்கள் மீதான எந்தவொரு பிரசாரத்தையும் தவிர்க்குமாறு பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் வடக்கில் மாவீரர்தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் தரப்பினருக்கு அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை மீறும் எந்தவொரு நபரையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

வடக்கில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26ஆம் திகதி மாவீரர் தினம் நினைவுகூரப்படுகிறது. வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.