போராடக்காரர்களால் உடைக்கப்பட்ட டி.ஏ. ராஜபக்ஸவின் சிலை மீண்டும் தங்காலையில்

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவால் கடந்த மே மாதம் 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தங்காலையில் உள்ள டி.ஏ. ராஜபக்ஸவின் சிலை உடைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சமல் ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோரின் தந்தையே டி.ஏ. ராஜபக்ஸ ஆவார்.

கொழும்பில்  அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் மக்கள் போராட்டம் வெடித்து டி.ஏ. ராஜபக்ஸவின் சிலையை உடைத்தனர். இந்த நிலையில், இந்த சிலை மீண்டும் புனரமைக்கப்பட்டு தங்காலையில் இருந்த இடத்திலேயே நேற்று காட்சிக்கு வைக்கப்பட்டது.