ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் விளாடிமிர் புடினின் உயர்மட்ட உதவியாளர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை

ஜனாதிபதி ஜோ பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர், விளாடிமிர் புடினின் உயர்மட்ட உதவியாளர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் உடனான அணு ஆயுதப் போரைத் தடுக்கும் முயற்சியில் ஜோ பைடன் நிர்வாகம் தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளதாகவே கூறப்படுகிறது. மட்டுமின்றி, உக்ரைனில் போர் தீவிரமடைவதற்கு கடுமையாக எச்சரித்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால் உக்ரைன் போர் தொடர்பில் சாத்தியமான தீர்வுகள் பற்றி அவர்கள் விவாதிக்க மாட்டார்கள் என்றே தெரிவிக்கின்றனர். இதனிடையே, புடினுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும் எனவும்இ போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துமாறும் அமெரிக்க அதிகாரிகள் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.