சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டு கொல்லப்பட்டார்.
சிவசேனா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சுதிர் சூரி, இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தார்ஸில், கோபால் மந்திர் எனும் இடத்தில் ஓர் கோவிலுக்கு எதிரே போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
சுடப்பட்டு காயமடைந்த சுதிர் சூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார். இவரை சுட்ட சந்தீப் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட சந்தீப் சிங் எதற்காக சுதிர் சூரியை சுட்டார்? என்ற காரணம் இன்னும் தெளிவாக வெளிவரவில்லை.
சந்தீப் சிங் சமபவ இடத்திற்கு காரில் வந்ததாகவும், அந்த காரில் உடன் வந்தவர்கள் அங்கிருந்து தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.சந்தீப் சிங் எதற்காக சுட்டார்.? சந்தீப்பிற்கு உதவியது யார் என்பது குறித்த தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.