யாழில் வட்டிக்கு வாங்கிய பணத்தினை செலுத்த முடியாத நிலையில் வர்த்தகர் தற்கொலை.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில், மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

நகர் பகுதியில் கடை ஒன்றினை நடத்தி வந்த 37 வயதான சி.சிவரூபன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சமீப காலமாகவே மீட்டர் வட்டிக்கு வாங்கிய பணத்தினை செலுத்த முடியாத நிலையில் கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்த அவர் நேற்று (வியாழக்கிழமை) தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

வர்த்தக நோக்கத்திற்காக மீட்டர் வட்டிக்கு வாங்கிய பணத்தொகையின் வட்டி, அதிகரித்து திருப்பி செலுத்த வேண்டிய பணத்தொகை அதிகரித்துக்கொண்டே சென்றதால், அவர் இந்த முடிவினை எடுத்திருக்க கூடுமென அவரது உறவினர்கள் மரண விசாரணைகளின் போது தெரிவித்திருந்தனர்.