ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த பணிப்புரை.

நியமிக்கப்படாத சகல பாராளுமன்ற குழுக்களையும் விரைவில் நியமிக்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிற்கு இன்று  பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, இதுவரை நியமிக்கப்படாத அனைத்து குழுக்களையும் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இன்று முதல் நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தொடங்கினார்.
நாடாளுமன்றத்தில் பல குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் 17 துறைசார் கண்காணிப்புக் குழுக்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.

இது தொடர்பில் வேட்புமனுக்களை சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும்இ இதுவரையில் வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.