காணி அபகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டம்.

காணி அபகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வலி வடக்கு பகுதியில் பொதுமக்களுடைய காணிகளை அபகரித்து அரசாங்க இயந்திரங்கள் தங்களுடைய செயற்பாடுகளுக்கு பயன்படுத்துகின்ற செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், சிவில் சமூகத் தலைவர்கள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.