ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி !

ஹிக்கடுவை – திராணகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று திங்கட்கிழமை (31 ) காலை 09.30க்கு குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மேலதிக விசாரணையில் காயமடைந்தவர்களை கராப்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்த இருவரும் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு செல்லும் வழியில் இவ்வாறு சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.