இலவச சுகாதாரசேவையை தனியார் மயப்படுத்துவதற்கு அரசாங்கம் முயல்கின்றது-அகில இலங்கை தாதிமார் சங்கம்.

இலவச சுகாதாரசேவையை தனியார் மயப்படுத்துவதற்கு அரசாங்கம் முயல்கின்றது என அகில இலங்கை தாதிமார் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு எதிராக பாரிய போராட்டத்தில் ஈடுபடுடவுள்ளதாகவும் அகில இலங்கை தாதிமார் சங்கம் தெரிவித்துள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட சில மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி சிகிச்சை  பெறும் முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார் இதனை செவிமடுக்கும்போது அரசாங்கம் இலவச சுகாதார சேவையை தனியார் மயப்படுத்த முயல்கின்றது என நாங்கள் கருதுகின்றோம் என அகில இலங்கை தாதிமார் சங்கத்தின் தலைவர் எஸ்பி மெடிவத்தை தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் ஊடாக தனியார் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது மக்களின் நலன்களிற்காக இதனை முன்னெடுக்கவில்லை என்பது தெளிவான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்க மருத்துவமனைகளில்  சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.என தெரிவித்துள்ள அவர் தனியார் மருத்துவமனைகளிற்கு சென்றவர்களால் தற்போது தனியார் மருத்துவமனைகளிற்கான கட்டணங்களை செலுத்தமுடியாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் முறையை அறிமுகப்படுத்துவதற்கு பதில் இலவச சுகாதார முறையை அரசாங்கம் விஸ்தரிக்கவேண்டும் எனவும் என அகில இலங்கை தாதிமார் சங்கத்தின் தலைவர் எஸ்பி மெடிவத்தை தெரிவித்துள்ளார்.

கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறக்கூடியவர்கள் செல்வதற்கான தனியார் மருத்துவமனைகள் நாட்டின் பல பகுதிகளில் உள்ளன இது குறித்து எங்களிற்கு ஆட்சேபம் இல்லை,மக்கள் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறக்கூடிய சில அரசாங்க மருத்துவமனைகள் உள்ளன இது குறித்து எங்களிற்கு ஆட்சேபம் இல்லை ஆனால் ஏனைய அரசாங்க மருத்துவமனைகளை மெல்ல மெல்ல தனியார் மயப்படுத்தும் முயற்சிகளை அனுமதிக்கமாட்டோம் ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து இதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.