T20 உலகக்கோப்பை: 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி

சிட்னியில் இன்று நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து- இலங்கை அணிகள் (குரூப்1) விளையாடி வருகின்றன. நாணய சுழற்சயில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 104 ஓட்டங்கள் குவித்தார். இலங்கை அணி தரப்பில் ரஜிதா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது.

அந்த அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.அந்த அணியில் முதல் 4 ஆட்டக்காரகள் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்து நடையை கட்டினர். நிசாங்கா எந்தவித ஓட்டங்களும் பெறவில்லை , குசல் மெண்டிஸ் 4 ஓட்டங்கள் , டி சில்வா 0 ஓட்டம் , அசாலங்கா 4 ஓட்டங்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து களம் இறங்கிய கருணாரத்னே 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் . இதையடுத்து ராஜபக்சா மற்றும் ஷனகா ஆகியோர் சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடினர். இதில் ராஜபக்சா 34 ஓட்டம் , ஷனகா 35 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் அந்த அணி 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியில் ஷனகா மற்று ராஜபக்சே தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்து வெளியேறினர். நியூசிலாந்து அணி தரப்பில் பவுல்ட் 4 விக்கெட்டும், சாண்ட்னெர், இஷ் சோதி தலா 2 விக்கெட்டும், சவுதி, பெர்குசன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரை இறுதிக்கான வாய்ப்பை பிரகாசமாக்கி உள்ளது. தோல்வி அடைந்ததன் மூலம் இலங்கை அணியின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.