21 ஆவது திருத்தத்தை பயன்படுத்தக்கூடாது: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்.

ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நீக்குவதற்கு அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை பயன்படுத்தக்கூடாதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் தொடர்பில் உரிய கட்டுப்பாடுகளும் சமநிலையும் 21 ஆவது திருத்தத்தில் உள்வாங்கப்படாமை வருத்தமளிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.நிறைவேற்று அதிகார பயன்பாட்டிற்கு 19 ஆவது திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட பல கட்டுப்பாடுகளும் சமநிலைகளும் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.