சுமந்திரன் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு எதிராகவே செயல்பட வேண்டும்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மனநிலை.

சுமந்திரன் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு எதிராகவே செயல்பட வேண்டும் என்ற எண்ணம்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அதிகம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் காட்டம் வெளியிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது 21ஆவது  மற்றும 22ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு என்ன கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. இதற்கு அவர் பதிலளிக்கும் போது 22ஆவது திருத்தச் சட்டம் சபையில் முன்வைக்கப்பட முன்னர் நாம் கூடிக் கதைக்கவில்லை. 20ஆம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே உரையாற்றினார். மறுநாள் 21ஆம் திகதி  எமது கட்சி கூடிய போது, தான் எதிராக பேசியதாக குறிப்பிட்டார் தனது முடிவு நடுநிலைமை வகிப்பது என்றும், எனினும் சித்தார்த்தன், கருணாகரம், அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் ‘8 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார் என்றும குருந்தூர்மலை உள்ளிட்ட பிரச்சினைகள், காணிப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உத்தரவாதமளித்துள்ளார; எனவும், 22ஆல் எமது மக்களுக்கு – தமிழ் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என எண்ணுவதால் அதனை ஆதரிப்பதற்கு அச்சம் தேவையில்லை எனவும் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

முன்பெல்லாம் சுமந்திரன் முடிவை அறிவிப்பார். அதை நடைமுறைப்படுத்தவே பார்ப்பார். அந்த கோபம் எல்லோரிடமும் நிறைந்துள்ளது. எனவே சுமந்திரனின் முடிவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலை பலரிடம் காணப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.