ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று  சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இந்த சந்திப்பின் போது, மனித உரிமைகள், பொருளாதார மீட்பு, ஜி.எஸ்.பிளஸ் வரிச்சலுகை, பயங்கரவாத தடைச்சட்டம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து இருதரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.