தற்போதைய ஜனாதிபதிக்கும் என்ன நடக்குமோ தெரியாது: எம். ஏ சுமந்திரன் தெரிவிப்பு.

முன்னாள் ஜனாதிபதியும் பல ஆலோசர்களின் கருத்தை கேட்டு கடைசியில் நாட்டை விட்டு ஓடிய நிலை ஏற்பட்டது. தற்போதைய ஜனாதிபதிக்கும்  என்ன நடக்குமோ தெரியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்இ கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.யாழில்  இடம்பெற்ற தீபாவளி நிகழ்வு ஒன்றில்  கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், நாட்டில் சிறுவர்கள் தற்பொழுது மந்தபோசா காண நிலையில் காணப்படுகின்றனர். நாட்டில் போசாக்கு தொடர்பில்  பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது அவ்வாறு எதுவுமில்லை என்று பொய் சொல்லுகின்றார்கள்.

போஷாக்கு தொடர்பாக ஜனாதிபதியின் ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ள சுரேன் பட்டகொட, நாட்டில் உணவு பற்றாக்குறை இ,சிறுவர்கள் போசாக்கு குறைவாக எதுவும் இல்லை என்று கூறியதாக தெரிவித்தார். நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் தெரியும் நாட்டில் எவ்வாறு பஞ்சம் பட்டினி ஏற்பட்டுள்ளது என்று ஆனால் உணவு பாதுகாப்புக்காக ஜனாதிபதி ஆலோசகர் அவ்வாறான பஞ்சம் பட்டினி எதுவும் இல்லை என்று கூறுகின்றார் என்றார்.