ராணுவ ஹெலிகாப்டர் விபத்து-05 பேர் பலி.
சீன எல்லைக்கு அருகே அருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் விழுந்த பகுதியில் இருந்து 5 உடல்கள் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளது.
சீன எல்லையில் இருந்து 30 கிமீ தொலைவில் இந்திய எல்லைக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள டுடிங் எனும் நகருக்கு அருகே ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கிழே விழுந்து நொறுங்கிவிட்டது.
விமானம் கீழே விழுந்து நொறுங்கிய பகுதி மிக்கிங் மலைப்பகுதி கிராமம் என்பதால் சாலை வசதி சரிவர இல்லை இதனால் மீட்பு குழுவினர் மலை மீது ஏறி இறந்த 5 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.