“சர்தார்”.! முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா.?

நடிகர்  கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் லைலா, ராசி கண்ணா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். லத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மிகவும் அருமையாக இருந்ததால் படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகின்றனர். கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் சர்தார் திரைப்படமும் அவருக்கு நல்ல ஓபனிங் கொடுத்துள்ளது.

அதன்படி சர்தார் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் வெளியான முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சர்தார் திரைப்படம் முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஓப்பனிங் கார்த்தி படத்திற்கு நல்ல வசூல் தான் என்று கூறப்படுகிறது. மேலும் வரும் நாட்கள் தீபாவளி விடுமுறை என்பதால் படத்திற்கான வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வசூல் குறித்த தகவலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.