நீங்களும் சரியில்ல மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஆடியோ.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை வெளியான சமயத்தில் ஜெயலலிதா மருத்துவரிடம் பேசுவது போல ஒரு ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
அந்த விசாரணை குழு சட்டசபையில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் அமைத்ச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்னன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது.
மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அந்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விசாரணை அறிக்கை செய்தி இணையத்தில் தீயாய் பரவிய வேளையில், ஜெயலலிதா தனது உடல் நிலை குறித்து மருத்துவரிடம் போனில் பேசுவது போன்ற ஒரு ஆடியோ வைரலாக பரவியது.
அதில், மருத்துவரிடம் தனது உடல்நிலை குறித்து பேசுகிறார். அதுகுறித்து மருத்துவர் விளக்கம் தருகிறார். நீங்களும் சரியில்லை என ஜெயலலிதா கூறுவது போல அந்த பேச்சு முடிவடைகிறது.
இந்த ஆடியோ எப்போது பேசப்பட்டது.? இது உண்மையில் ஜெயலலிதா பேசியது தானா ? என்கிற விவரங்கள் சரிவர தெரியவில்லை. இருந்தும், சரியாக விசாரணை அறிக்கை வெளியான சமயம் இந்த ஆடியோ வெளியானதால் இணையத்தில் வைரலாக மாறியது.