நானுஓயா கிலாரண்டனில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு

செ.திவாகரன்

தொடர் மழை காரணமாக இன்று காலை நுவரெலியா தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் 105வது கிலோமீட்டர் தூரத்தில் கிலாரண்டன் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில் இவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

இந்த மண்சரிவு காரணமாக நுவரெலியா, தலவாக்கலை மற்றும் மெராயா வழியூடாக டயகமைக்கான போக்குவரத்து முற்றாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனால் மாற்று வீதியாக நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியினை பயன்படுத்தி வருகின்றன.

எனினும் டெஸ்போட் பகுதியில் போக்குவரத்து சேவையின்றி பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன

இப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் அப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.