யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு: எடுக்கபடும் நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்த நிலையில், அதிர்ச்சியூட்டும் குற்றச்செயல்களால் மக்கள் மத்தியில்  அச்ச உணர்வும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ள நிலையில்,வட பகுதியில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழ் நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி மணிவண்ணன் தெரிவித்தார்.

பெப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ் மாவட்ட பெண்கள் குழு நடாத்தும், போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்வோம் எனும் தொனிப் பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு திருநெல்வேலி முத்து தம்பி இந்து மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி மணிவண்ணன் இதனைத் தெரிவித்தார்.