அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19) இலங்கை வந்தடைந்தார்.

93

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19) இலங்கை வந்தடைந்தார்.

இலங்கை வந்திறங்கிய டொனால்ட் லுவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வரவேற்றுள்ளார். இதனை அமெரிக்கத் தூதுவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

மேலும் பிராந்திய பாதுகாப்பு, மனித உரிமைகள் தொடர்பாக டொனால்ட் லூ ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.