அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று இலங்கை வருகிறார் !

 

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ, இன்றைய தினம் இலங்கை வருகிறார்.

டொனால்ட் லூவுடன் அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு ஒன்றும் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெற்காசிய பிராந்தியம் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி, மனித உரிமைகள் நிலவரங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவினர், இலங்கையில் கலந்துரையாடவுள்ளனர். டொனால்ட் லூ, அண்மையில் இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாகவே அமெரிக்க குழுவினரின் இலங்கை விஜயமும் அமையவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.