• Friday, December 5, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

அரிசிக் கையிருப்பு வரும் மாதங்களில் தீர்ந்துபோகலாம்!

Kumarathasan Karthigesu

By Editor On Oct 18, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

பிரான்ஸின் அரிசி ஆலைகளின் ஒன்றியம் (Syndicat de la Rizerie Française) அரிசித் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்புக் குறித்த எதிர்வு கூறலை வெளியிட்டிருக்கிறது. பெரும் அரிசி உற்பத்தி நாடுகளில் சமீபகால ங்களில் ஏற்பட்ட பருவநிலை மாறுதல்களின் விளைவாக நெல் விளைச்சல் பெருமளவில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதன் தாக்கத்தால் அடுத்துவருகின்ற மாதங்களில் உலகின் அரிசிக் கையிருப்புத் தீர்ந்து போகலாம் என்று ஒன்றியம் எச்சரித்துள்ளது.

நாட்டில் அரசி நெருக்கடி அறுவடைக் காலமாகிய வரும் பெப்ரவரி – மார்ச் மாத காலப்பகுதியில் தொடங்கலாம். அப்போது கடைகளில் முற்று முழுதாக அரிசி தீர்ந்துபோகாது விட்டாலும் எதிர்காலத்தில் விநியோகங்களுக்கு விலை அதிகரிப்பைச் செய்ய நேரிடும் என்று அரிசி ஆலைகளின் ஒன்றியத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

பிரான்ஸ் வருடாந்தம் 50 ஆயிரம் தொன் அரிசியை உற்பத்தி செய்கிறது. ஆனால் நாட்டின் பெரும் சந்தைகளில் 2ஆயிரத்து 40 ஆயிரம் தொன் அரிசி ஆண்டுதோறும் விற்பனையாகிறது. பல காரணங்களால் வருடாந்த அரிசி உற்பத்தி இம்முறை பெரு வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலகளாவிய பற்றாக்குறை காரணமாக அரிசி இறக்குமதி தடைப்படுமாக இருந்தால் உள்நாட்டில் அதற்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

Catchup shows

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உற்பத்தியாகின்ற பாசுமதி அரிசியே (basmati rice) பிரான்ஸில் 45 சதவீதம் நுகரப்படுகிறது. இவ்விரு நாடுகளிலும் சமீப நாட்களில் ஏற்பட்ட கடும் வரட்சி மற்றும் வெள்ளப் பெருக்குப் போன்றன நெற்தானிய விளைச்சலைப் பலமாகத் தாக்கியிருக்கின்றன. சுமார் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் தொன் (250,000 tonnes) நெல் வகைகள் அழிந்துள்ளன. இந்த நிலைவரம் காரணமாக இவ்விரு நாடுகளும் தத்தமது சொந்த மக்களது நலனைக் கருத்தில் கொண்டு அரிசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியுள்ளன.

பாசுமதி மட்டுமன்றி ஐரோப்பாவில் நுகரப்படுகின்ற ஏனைய பல அரிசி வகைகளும் ஆசிய நாடுகளிலேயே உற்பத்தியாகின்றன. அந்த நாடுகள் பலவும் எரிசக்தி நெருக்கடி, காலநிலைப் பாதிப்பு என்று பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ளன. அதனால் உலகளாவிய அரிசி உற்பத்தியும் ஏற்றுமதியும் பெரும் வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளன.

உக்ரைன் போர் உலகின் தானியத் தன்னிறைவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கோதுமை, சோளம் போன்றவற்றுக்கு உலக அளவில் தட்டுப்படு ஏற்பட்டுள்ளது. அது மனித உணவுத் தேவைகளை மட்டுமன்றி கால்நடைகளுக்கான தீவனங்களினது உற்பத்தியையும் பாதித்துள்ளது.

சீனா போன்ற நாடுகள் கால்நடைத் தீவனத் தேவைகளுக்கான அரிசியை ஆசிய நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்ய முயன்று வருகின்றன. இதுவும் அரிசித் தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணமாகியு ள்ளது.

Prev Post

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு Booker பரிசு!

Next Post

உக்ரயினில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து…

Dec 1, 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்…

Dec 1, 2025

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில்…

Dec 1, 2025

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு!

Nov 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத்…

Nov 17, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் 21ஆம் திகதிப் பேரணி…

Nov 15, 2025

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில்…

Nov 14, 2025

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

Nov 13, 2025

இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

Nov 13, 2025

பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா…

Nov 3, 2025
Prev Next 1 of 421
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.