T20 உலகக்கோப்பை ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேக்கிந்திய அணியை வீழ்த்தியது.

16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13ந் தேதி வரை நடைபெறுகிது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இதில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – மேக்கிந்திய அணிகள் விளையாடின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முன்சே 66 ஓட்டங்களும் , கிறிஸ் 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 161 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேக்கிந்திய அணி களம் இறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக கைல் மேயர்ஸ், இவின் லீஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மேயர்ஸ் 20 ஓட்டங்கள் , இவின் லீவிஸ் 14 ஓட்டங்கள் அடுத்து வந்த பிரண்டன் கிங் 17 ஓட்டங்களுடனும் இழந்தனர். இதையடுத்து கப்டன் பூரன், ஷார்மா புருக்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். ஸ்காட்லாந்து அணியினர் மிகச்சிறப்பாக பந்துவீசி மேக்கிந்திய அணியினருக்கு சிக்கல் கொடுத்தனர்.

மேக்கிந்திய அணியில் பூரன் 4 ஓட்டங்கள் , புரூக்ஸ் 4 ஓட்டங்கள், பவல் 5 ஓட்டங்கள், அகைல் ஹோசன் 1 ஓட்டங்கள், அல்ஜாரி ஜோசப் 0 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதனால் அந்த அணி 79 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 9வது விக்கெட்டுக்கு ஹோல்டருடன் ஒடெய்ன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இறுதியில் அந்த அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118 ஓட்டங்களே எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், பிரெட் வீல், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜோஷ் டாவே, சப்யான் ஷரிப் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக் ஹோல்டர் 38 ஓட்டங்கள் எடுத்தார். இரண்டு முறை டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து அணியிடம் வீழந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.