தேசிய அடையாள அட்டை கட்டணம் அதிகரிப்பு

தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா என்ற கட்டணம்  200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், திருத்தம் செய்து மீண்டும் பெற்றுக் கொள்ளப்படும் தேசிய அடையாள அட்டைக்காக இதுவரை அறவிடப்பட்ட 250 ரூபா என்ற கட்டணம் 500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.