இலங்கைக்கு நன்கொடையாளர்களின் ஒருங்கிணைப்பை விரிவுபடுத்த IMF முயற்சி.

இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளுக்கு நன்கொடையாளர்களின் ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளைத் தேடுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதாரம் தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் பயனுள்ள கடனைத் தீர்க்கும் பொறிமுறைக்கு சர்வதேச நாணய நிதியம் தலைமை தாங்குவதாக அவர் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.