பிரான்சில் 19 பாகை செல்சியஸ்சிற்கு அதிகமாக வெப்பமூட்டியினை பயன்படுத்தினால் 1,500 யூரோக்கள் வரை அபராதம்.

பிரான்ஸில் இந்த குளிர்காலத்தில் எரிவாயு மற்றும் மின்சார பற்றாக்குறையின் அபாயங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மக்கள் தயாராகிவிட்டனர். அதற்கமைய, மக்கள் தங்கள் வீடுகளிலும் வணிக நிலையங்களிலும், அலுவலகங்களிலும், பொது கட்டிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி மின்சாரத்தை சேமிக்க தயாராக உள்ளனர்.

பாடசாலைகள், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிகபட்ச வெப்பமாக 19 பாகை செல்சியஸ் வரை மாத்திரமே பயன்படுத்தும் நடவடிக்கைக்கு 80 வீத மக்கள் ஆதரவாக இருப்பதாக புதிய கருத்து கணிப்பில் கண்டுபிடிக்க்பபட்டுள்ளது. வீட்டிலேயே இந்த நடைமுறை கடைடிப்பிடிப்பதற்கு தயாராக இருப்பதாக 71 சதவீதம் பேர் கூறியுள்ளனர். கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 64 சதவீதம் பேர் எரிவாயு மற்றும் மின்சாரம் மீதான கட்டணத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதேவேளை, மின்சார தடை ஏற்படுத்தப்படும் என அறிவிக்கக்பட்டிருக்கும் தகவல் 73 சதவீதம் மக்களை வருத்தத்திற்குள்ளாகியுள்ளதாக இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். எப்படியிருப்பினும் அதிகபட்ச வெப்பமாக 19 பாகை செல்சியஸ் வரை மாத்திரம் பயன்படுத்தாத வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற கருத்தை பலரும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அந்த நடைமுறை கடுமையாக சோதனை செய்யப்படும் எனவும் அதற்கான அபராதம் விதிக்கப்படும் எனவும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் மக்கள் வாழும் இடங்களிலும் தங்கள் வீட்டை எப்படி கண்டுபிடிக்க முடியும் என சிலர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அதனை கண்டறிவதற்கான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை கண்டுபிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வீடுகளில், பாடசாலைகளில், அலுவலகங்களில் அதிகபட்ச வெப்பமாக் 19 பாகை செல்சியஸ் வரை மாத்திரமே மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,  அதற்கு அதிகமாக வெப்பமூட்டியினை பயன்படுத்தினால் 1,500 யூரோக்கள் வரை அபராதம் செலுத்த நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.