நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பியுமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசி சிஐடியிடம்.
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசி சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பியுமாலி வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் பெண் கைதிகள் பிரிவில் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது திலினி பியுமாலியிடமிருந்து கையடக்க தொலைபேசியொன்று மீட்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த கையடக்க தொலைபேசி சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையடக்க தொலைபேசிக்கு உள்வந்த அழைப்புகள் மற்றும் வெளியே மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.