தமிழ் தினப் போட்டியில் நுவரெலியா பரிசுத்த திரித்துவ கல்லூரி தேசிய மட்டத்திற்கு தெரிவு.

செ.திவாகரன்

மத்திய மாகாண ரீதியில் தமிழ் மொழி தின பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் மீண்டும் தனது வெற்றியை பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) நிலைநாட்டியுள்ளது கோட்ட மட்ட போட்டிகள் மற்றும் வலய மட்ட போட்டிகள் கடந்த மாதங்களில் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து நுவரெலியா கல்வி வலயத்தில் இருந்து இலக்கிய நாடகப்போட்டி, அறிவிப்பாளர் போட்டி, நடனப் போட்டி என்பவற்றுக்கு இப்பாடசாலை தெரிவாகியிருந்தது.

சனிக்கிழமை (08) ஆம் திகதி மாகாண மட்ட போட்டிகள் கம்பளை சாஹிரா கல்லூரியில் இடம்பெற்றது இதில் இலக்கிய நாடக போட்டியில் முதலிடத்தினையும் , தனி நடனப்போட்டியில் செல்வி கீர்த்திகா முதலிடம் பெற்று தேசிய மட்டம் தெரிவாகியுள்ளனர். மேலும் அறிவிப்பாளர் போட்டியில் செல்வி பவதாரணி இரண்டாம் இடத்தினையும் பெற்று தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்த வெற்றிக்காக பல வழிகளிலும் உழைத்த கல்லூரியின் அதிபர் எஸ் ரவிச்சந்திரன் மற்றும் உப அதிபர்கள் நாடக பொறுப்பாசிரியர் திரு.சுதர்சன் , நடன பொறுப்பாசிரியர் ஜெயாலினி மற்றும் சண்முகநாதன் ,கார்த்திக் ,தனுசா , அமுதா,கீர்த்தனா அவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துள்ள அதேவேளையில் பலரும் இவர்களை வாழ்த்தி வருகின்றனர்