உதவும் கரங்கள் அமைப்பின் ஒரு வருட பூர்த்தி விழா நுவரெலியாவில்.

செ.திவாகரன்

 

நுவரெலியா மார்காஸ்தோட்டம் மேற்பிரிவு தோட்ட இளைஞர் , யுவதிகளின் உதவும் கரங்கள் அமைப்பின் ஒரு வருட பூர்த்தி விழா சனிக்கிழமை (08) மிகச்சிறப்பாக நடைபெற்றது.

உதவும் கரங்கள் அமைப்பு ஆரம்பித்து ஒரு வருட பூர்த்தி நிகழ்வும், வாணி விழாவும், வருடாந்த பரிசளிப்பு விழாவும், கலை கலாச்சார நிகழ்வுகளும் மார்காஸ்தோட்ட மேற்பிரிவு ஸ்ரீரங்கா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் ஜெயராமன் வினோத்ஜி அவர்கள் கலந்து கொண்டதுடன் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பரிசல்களையும் வழங்கி வைத்ததுடன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்

மேலும் இந்நிகழ்வில் சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், இளைஞர் சம்மேலன அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.