பொன்னியின் செல்வன் 7 நாட்களில் 300 கோடி ரூபாய் வசூல்

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த திரைப்படம் தமிழகத்தில் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த என்ற சாதனையை நேற்று முன்தினம் படைத்தது. அதேபோல் உலக அளவில் இந்த திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

அதன் அடிப்படையில் உலகம் முழுவதும் 7 நாட்களில் 300 கோடி ரூபாய் வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை பொன்னியின் செல்வன் படைத்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் உலக அளவில் 750 கோடி ரூபாய் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.