கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ 21ஆம் திகதி வெளியாகிறது.

 

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.  இருந்தாலும் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் சர்தார் தீபாவளிக்கு முன்பாக 21ஆம் தேதியே வெளியாகிறது என்பது உறுதியாகி உள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21ஆம் தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படமும் 21ஆம் தேதியே வெளியாவது உறுதியாகிள்ளது. இந்த திரைப்படத்திற்கான புரமோஷன் வேலைகளையும் பட குழுவினர் தொடங்க உள்ளனர்.

அதில் முதல் கட்டமாக படத்தில் இடம்பெறும் முதல் பாடலை பட குழு விரைவில் வெளிட உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் ஏறுமயிலேறி என்ற பாடலை நடிகர் கார்த்தியே பாடியுள்ளார். இதனால் அந்த பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.