முத்தரப்பு டி20 தொடர்: வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி.

70

முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்க வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளன. இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்நிலையில் இன்று தொடங்கிய இத்தொடரின் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சயில் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கப்டன் பாபர் ஆசம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பாபர் ஆசம் 22 ஓட்டங்களில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார் . அடுத்து ரிஸ்வானுடன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ஷான் மசூத் 22 பந்துகளில் 31 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார் . அடுத்து வந்த ஹைதர் அலி 6 ஓட்டங்கள் , இப்டிகார் அகமது 13 ஓட்டங்கள், ஆசிப் அலி 4 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியில் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 78 ஓட்டங்கள் குவித்தார். இதையடுத்து 168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெஹதி ஹ்சன் மிராஸ் , சபீர் ரஹ்மான் ஆகியோர் களம் இறங்கினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 25 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் 10 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து சபீர் ரஹ்மான 14 ஓட்டங்களில் ஆட்ட்ம் இழந்தார். அடுத்து லிட்டன் தாஸ் மற்றும் ஆபிப் ஹொசைன் ஆகிய்யோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் முகமது நவாஸ் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தை பாகிஸ்தான் பக்கம் திருப்பினார்.

இறுதியில் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 35 ஓட்டங்களும் , யாசிர் அலி ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது வாசிம் 3 விக்கெட்டும், முகமது நவாஸ் 2 விக்கெட்டும், தகானி, ஷதாப் கான், ஹாரிஸ் ராப் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்