வசந்த முதலிக கொலை செய்யப்படலாம்: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிக இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வசந்த முதலிகே தப்பிச் செல்ல முயன்றார் எனக்கூறி அவரைக் கொலை செய்யும் ஆபத்து காணப்படுவதாகவும் சபைக்கு அறிவித்தார்.
ஜெனிவாவில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் பேசப்படும் தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் இவ்வாறு நடந்துக்கொள்வது சரியா? எனவும் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பினார்.
இந்த விடயத்தில் நடந்திருப்பது அரச பயங்கரவாதமே எனவும் தெரிவித்த சஜித், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீதும் இந்த அரசாங்கம் தாக்குதலை மேற்கொள்கிறது எனவும் தெரிவித்தார்.