பாடசாலை நூலகத்தில் வைத்து 12 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்.!
பாடசாலை நூலகத்தில் வைத்து 12 வயது மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மொரட்டுவை நகரின் மத்தியில் அமைந்துள்ள மாதிரி பாடசாலையில் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
குறித்த மாணவி புத்தகம் எடுப்பதற்காக நூலகத்திற்குச் சென்ற போது, நூலகப் பொறுப்பாளர் மாணவியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று துன்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தொலைபேசியில் செய்த முறைப்பாட்டின் பேரில், மொரட்டுவ பொலிஸாரால் பாடசாலையின் 61 வயதான நூலகர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.