திருமாவளவன், சீமான் இருவரும் தேச துரோகிகள்: எச்.ராஜா பேச்சு.

‘சட்டப்படி தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது குற்றச் செயல், 11ம் தேதி திருமாவளவன் நடத்தும் மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளின் கைக்கூலி திருமாவளவன். அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விசிக-வை தடை செய்ய வேண்டும். திருமாவளவன், சீமான் இருவரும் தேச துரோகிகள்.முதல்வர் ஸ்டாலின் மிகவும் நல்லவர், ஆனால் ஸ்டாலினுடன் இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள்.

விசிக,நாதக-வை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களின் விரோத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது, டி.ஜி.பி-க்கு சைக்கிளில் செல்லவே நேரம் சரியாக உள்ளது. சைவம், வைணவம் உள்ளிட்ட எத்தனை உட்பிரிவுகள் இருந்தாலும் அத்தனையும் இந்துதான,; இந்து தேசத்தில் உருவான மதங்கள் அனைத்தும் இந்து மதமே.எனத் தெரிவித்த அவர்,

ராஜராஜ சோழன் எங்கே மசூதி, சர்ச் கட்டினார் என வெற்றி மாறன் விளக்க வேண்டும் என்றும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி ராஜராஜ சோழன் இந்துதான், திராவிட மாடல் ஆட்சிக்கு சுயமாக சிந்திக்க தெரியாது என விமர்சித்துள்ளார்.